திமுகவுக்கு ஆதரவளித்த 8பேர் நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட 8 பேர் அதிமுகவில் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.;

Update: 2021-10-03 11:40 GMT

ஓபிஎஸ், இபிஎஸ்

இராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக 8பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக கட்சி ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தல் வரும் 6ந்தேதி மற்றும் 9ந்தேதி நடக்க உள்ளது . அதில் அதிமுக சார்பில் மாவட்டகவுன்சிலர், ஒன்றியகவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சின்னத்திலும் பஞ்.தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி ஆதரவு பெற்றவர்கள்  சுயேட்சையாாக போட்டியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல்  அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற முன்னாள் அமைச்சர்கள் மற்றும்  கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் மாவட்டத்திலேயே  தங்கி தீவிரப்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக ஒன்றிய துணை,,இணைப் பொருப்பாளர்கள் , கிளைசெயலாளர்கள் என 8பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்

இது குறித்து அவர்கள் ; கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், கட்சிக்கட்டுபாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக,போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தலில் பணியாற்றுகின்ற காரணத்தால்1, T.பாபு, நெமிலி ஒன்றிய ஜெ.பேரவை துணை தலைவர், 2,,S. பாஸ்கரன், சோளிங்கர் ஒன்றிய ஜெ.பேரவை, 3, P.சையத்கான் ஆற்காடு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ,4.K. வெங்கடேசன் ஆற்காடு மே.ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மற்றும் கிளை செயலாளர்கள் அரக்கோணம் ஒன்றியம் 5. அனந்தபுரம் பாண்டியன், 6.C.கஜேந்திரன்,தணிகைபோளூர் ,7 L. வெங்கடேசன்,நெமிலி ஒன்றியம், மற்றும் கடம்பநல்லூர், அசோக்குமார் ஆகியோர் கட்சி அடிப்படை உறுப்பினர் ,பொறுப்புகளிலிருந்து நீக்கிவைக்கப்படுகின்றனர் எனவே, அவர்களுடன் கட்சியினர்தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags:    

Similar News