அரக்கோணம் பாய்லர் விபத்து: 4 பேர் பலி
அரக்கோணம் ராம்கோ சிமென்ட் கம்பெனியில் பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்தவர்களில் 4 பேர் பலியானார்கள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வின்டர்பேட்டையில் உள்ள ராம்கோ சிமென்ட் சீட் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த 17ந்தேதி ராட்சத பாய்லர் வெடித்தது. அப்போது அங்கு பணியிலிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கள்ளகுறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வசந்த் (24) மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகம்மதுஜா, சர்தார்அலி, பங்கஜ்குமார், ராம், ராகுல்வி ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு சென்னை கீழ்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்
சிகிச்சை பெற்றுவந்த 6 பேரில், முகம்மது ஜாபி, ராம் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேவேளையில், ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வசந்த் உட்பட மற்ற நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.