அரக்கோணத்தில் மணல் கடத்திய 4 பேர் கைது
அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் அள்ளிச் செல்வதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் அடிக்கடி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணித்து வந்தனர் .
இந்நிலையில் போலீஸார் ஆற்றுப் பகுதிக்கு ரோந்து சென்றபோது கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மணி(60),ரகு (40), சிவலிங்கம்(62),மற்றும் தனஞ்செழியன்(57) ஆகிய4 பேரும் தங்கள் மாட்டு வண்டிகளை ஓட்டிக் கொண்டு ஆற்றிலிருந்து வந்தனர். அவர்களை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டதில் அவர்கள் ஆற்றிலிருந்து மணல் அள்ளி வருவது தெரிந்தது.
இதனையடுத்து4 பேரையும் கைது செய்த போலீஸார், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.