அரக்கோணம் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது
அரக்கோணம் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது
அரக்கோணம்அடுத்த ஆவதம் அருகே பிரபல ரவுடியைவெட்டிக்கொலை செய்த வழக்கில் 7பேரைகைது செய்த நிலையில் மேலும்2பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவன் பஸ்வான்(26). அவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்தஜூன்28ந்தேதி மதியம் பஸ்வான் ஆவதம் கிராமம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியாக நின்றிருந்த போது மர்ம கும்பல் ரவுடி ஒன்று பஸ்வானை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
தகவலறிந்த அரக்கோணம் தாலூகா போலீஸார்,சம்பவம் இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது அங்கு வந்து மாவட்ட எஸ் பி ஓம் பிரகாஷ்மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்த அவர் சந்தேகப்படுபவர்களை பிடித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடித்து கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து ஆவதம் பகுதியைச் சேர்ந்த 4பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பஸ்வான் அப்பகுதியில் வழிப்பறி,கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தபோது கடந்த 2015ல் ஆவதம் பகுதியைச் சேர்ந்தபஸ் கண்டக்டர் ஒருவரிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட கண்டக்டரின் தம்பி லோகேஷை பஸ்வான் கொலை செய்துள்ளான். பின்பு கைது செய்யப்பட்ட பஸ்வான் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
இந்நிலையில் மாவட்டம் பிரிக்கப்பட்டு இராணிப்பேட்டை மாவட்டத்தின் எஸ்பியாக மயில் வாகனன் இருந்த போது தனிப்பிரிவு போலீஸார் மாவட்டத்தில் பல முக்கிய குற்றவாளிகள் கண்காணித்து வந்தனர். அப்போது பஸ்வான் அதற்கு பயந்து போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவானான்.
பின்பு எஸ்பி, இடமாற்றத்தையறிந்து பஸ்வான் சொந்த ஊருக்கு வந்து சுதந்திரமாக சுற்றிவந்தான் .இதனையறிந்த பஸ்வானால் கொலையுண்ட லோகேஷின் உறவினர்கள் பஸ்வானை பழிவாங்குவதற்காக தொடர்ந்து கண்காணித்தனர் இந்நிலையில் அவன் சம்பவ இடத்தில் அன்று தனியாக நின்று இருந்ததை கண்டு ஆவதத்தைச்சேர்ந்த அன்பரசு,சிவா,கிருஷ்ணமூர்த்தி, விக்கி(எ)விக்னேஷ்,சூர்யா(எ) சூர்யமூர்த்தி, ரஞ்சித்,சதீஷ்(எ)அஜீத் மற்றும் இருவர் சேர்ந்து கட்டை மற்றும் கத்தியால் குத்தி கொலைசெய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர.
இதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைப் போலீஸார் தேடி வந்தனர் இந்நிலையில் சோளிங்கர் அடுத்த பாணாவரம் காப்புக்காட்டில் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் சென்ற பதுங்கி இருந்தவர்களைப் பிடித்து கைது செய்து சிறையிலடைத்தனர்.
மற்ற இரு குற்றவாளிகளான புஜ்ஜி(எ)முனிசாமி,பால்ராஜ் ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸார் சிறையிலடைத்தனர்.