அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏவும் , அதிமுக துணைக்கொறாடா சு.ரவி ஆய்வு செய்தார்.

Update: 2021-07-22 05:17 GMT

அரக்கோணம் மருத்துவமனையை ஆய்வு செய்யும் எம்எல்ஏ ரவி.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அதிமுக துணை கொறாடாவும் அரக்கோணம் எம்எல்ஏ.,வுமான ரவி ஆய்வு செய்தார்.

ஆய்வில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிககளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் வார்டுகளுக்கு நேரில் சென்று அங்கு இருந்தவர்களிடம் மருத்துவமனையில் போதுமான வசதி அமைக்கப்பட்டுள்ளதா என்றும் மருத்துவ பணியாளர்களின் சிகிச்சைக்குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வினைத்தொடர்ந்து, மருத்துவமனையில் ஆக்சிஜன் செரிவூட்டி மையம் அமைக்கப்படுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டார். பின்னர் அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக புதிய கட்டிடம் மற்றும் ஜெனரேட்டர் வசதியுடன் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் செரிவூட்டி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான நிதியினை தொகுது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி 33 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது, மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News