சோலார் மின் விளக்கு கம்பத்திலிருந்து பேட்டரி திருடும் சிசிடிவி காட்சிகள் : அரக்கோணத்தில் பரபரப்பு
அரக்கோணம் அருகே சோலார் மின் விளக்கு கம்பத்திலிருந்து பேட்டரி திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த சிருணமல்லி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக சோலார் மின் விளக்கால் ஆன எல்இடி மின்கம்பம் அரசு சார்பில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கம்பத்தின் மீது உள்ள பேட்டரியை லாவகமாக கீழே தூக்கி எறிந்து மீண்டும் அதனை எடுத்து செல்லும் காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு காவல்துறையினர் பேட்டரிகள் திருடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்