விஜய் பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு..!
விஜய்யின் பிறந்த நாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த ரசிகர்கள்.
பரமக்குடியில் விஜய்யின் பிறந்த நாளன்று பிறந்த குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்கமோதிரம் அணிவித்தனர். நடிகர் விஜய்யின் 47 வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் விஜய்யின் பிறந்தநாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஜய் ரசிகர் மக்கள் மன்றம் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இதில் விஜய் ரசிகர் மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.