பரமக்குடி அருகே இருதரப்பினர் மோதல்.கார்,டிராக்டர் எரிப்பு -வீடுகள் சூறை

பரமக்குடி அருகே இரு தரப்பினர் மோதல். கார், டிராக்டர் எரிப்பு, வீடுகள் சூறை -20 பேர் மீது வழக்கு பதிவு.;

Update: 2021-06-17 17:33 GMT

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவருக்கும் முத்துராமலிங்கம் என்பவருக்கும் ஏற்கனவே ஊராட்சி தேர்தலின் போது முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஊரடங்கு காலத்தில் முத்துராமலிங்கம் தரப்பை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக, சாமிதுரை தரப்பினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது. இந்தநிலையில் ஜாமினில் வெளியே வந்த சதீஷ்குமார் தரப்பினர் சாமிதுரை தரப்பை சேர்ந்த அன்பழகன் உள்பட 6 பேரை மண்வெட்டி மட்டும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 நபர்கள் மீதும் நயினர்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இரவு முத்துராமலிங்கம் தரப்பைச் சேர்ந்த நபர்கள் சாமி துரையின் சேம்பருக்கு சென்று அங்கிருந்த சாமிதுரையின் சகோதரார் ராஜாவை வெட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சாமிதுரை தரப்பினர் முத்துராமலிங்கம் வசிக்கும் பகுதிக்கு சென்று, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார், 2 டிராக்டர், 4 இருசக்கர வாகனங்களை எரித்து, முனியாண்டி, தமிழரசன், முத்துராமலிங்கம் உட்பட 8 பேரின் வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. மேலும், தகவல் அறிந்த இராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 20 நபர்கள் மீது வழக்கு பதிந்து 9 நபர்களை கைது செய்தனர். பாண்டியூர் கிராமத்தில் வாகனங்களுக்கு தீ வைத்து, வீடுகள் சூறையாடப்பட்டன தொடர்ந்து கிராமம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News