இளைஞர்கள் சுயதொழில் தொடங்க கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தகவல்
இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தகவல்.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பினைத் தேடி நகர்புற பகுதிகளுக்கு இடம் பெயர்தலை தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்தவும். பொருளாதார ரீதியாக, நலிவடைந்த பிரிவினர் சுயதொழில் தொடங்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், தமிழக அரசின் படித்த வேலை வாய்ப்பற்ற இளைர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள் சுயமாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீடு உச்சவரம்பு முறையே ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 25மூ அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ரூ.2,50,000/- மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விபரங்கள் அறிய பொதுமோலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம். (தொலைபேசி எண். 04567 - 230497 என்ற முகவரியை பயனாளிகள் அணுகலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா தெரிவித்துள்ளர்.