கொத்து புரோட்டா போட்டு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

கொத்து புரோட்டா போட்டு கெத்தாக ஓட்டு கேக்கும் பரமக்குடி (தனி) அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர்.;

Update: 2021-03-25 03:53 GMT

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சதன் பிரபாகர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பரமக்குடி சின்னக்கடை வீதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஹோட்டல் ஒன்றில் கொத்து புரோட்டா போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பறை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சதன் பிரபாகர் இன்று கொத்து புரோட்டா போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News