இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி
முதுகுளத்தூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முன்றதால் பரபரப்பு.;
முதுகுளத்தூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசாருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முன்றதால் பரபரப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த முனியசாமி- செல்வி என்பவரின் மகன் சபரீஸ்வரன் (21). இவர் மதுரையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாதபோது மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட சபரீஸ்வரன் உடலை காவல்துறைக்கு தெரியாமல் அவசர அவசரமாக அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு சென்றபோது வருவாய்த்துறை, காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தி உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சபரீஸ்வரன் இறப்பில் வேறு ஏதேனும் மர்மங்கள் இருக்கலாம் என தெரிய வருவதால் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் பழனி கொடுத்த புகாரின் பேரில் கீழ்த்தூவல் காவல் ஆய்வாளர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.