திருப்புல்லாணி ஆதி ஜகன்னாத பெருமாள் கோயிலில் யாக பூஜைகள் நடைபெற்றது
திருப்புல்லாணி ஆதி ஜகன்னாத பெருமாள் கோயிலில் திருதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.;
திருப்புல்லாணி ஆதி ஜகன்னாத பெருமாள் கோயிலில் திருதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் 44வதாக உள்ள பிரசித்தி பெற்று விளங்கும் ஆதி ஜெகன்நாத பெருமாள் ஆலயத்தில் முன்புற சக்கர தீர்த்தம் அர்த்த மண்ட பத்தில் ஸ்ரீமத் ராமாயண மகா வேள்வி துவங்கி நடைபெற்றது. இதில் ஐதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலை அமைத்த திரித்தண்டி ராமானுஜ சின்ன ஜீயர் தலைமையில் சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. இப்பூஜையில் புண் ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டு தொடர்ந்து திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. சகஸ்ரநாம பாராயணம் ராமாயண இதிகாச வேள்வி நேற்று இரவு 8:00 மணி வரை நடைபெற்றது. இதில் திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர், மற்றும் 61 பட்டாச்சாரியார்களால் நாலாயிர சேவையில் திவ்யப் பிரபந்தம் பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டு வருகின்ற. இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதியிலிருந்து ஏராளமான வெளியூர் பக்தர்கள் பங்கேற்றனர்.