முதுகுளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து. 25க்கும் மேற்பட்டோர் காயம்
முதுகுளத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.;
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவிற்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அந்த கிராமத்திலிருந்து செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கால்வாயில் வேன் கவிழ்ந்தது. அந்த வேனில் பயணம் செய்த அருள் (17), முகேஷ் கண்ணன் (15), சந்திரபாண்டி (50), சக்திவேல்(72), புஷ்பம் (52), உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக, பசும்பொன்னுக்கு வாகனங்களிலோ, நடந்து சென்றோ அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், போலீஸ்காரர்களை அந்த கிராமத்தினர் செல்ல வேன் ஏற்பாடு செய்து குருபூஜை விழாவிற்கு அனுப்பிய போது வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.