பசும்பொன்னில் மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் வைகோ மற்றும் துரை.வைகோ ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார்பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழா தொடங்கியது.
இதையடுத்து முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.