கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது. சொகுசு கார், ஆயுதங்கள் மற்றும் மான்கொம்பு பறிமுதல்;

Update: 2022-04-22 06:15 GMT

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்து சொகுசு கார், ஆயுதங்கள் மற்றும் மான்கொம்பு பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே கடலாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புரசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் மற்றும் மாயழகு வந்த காரை வாகன சோதனை செய்தபோது ஒற்றை மான் கொம்பு, மற்றும் அரிவாள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மான் கொம்பை கடத்தியதாக கடத்தலுக்கு பயன்படுத்திய கார், அவர்கள் வைத்திருந்த அரிவாள் ஆகியவற்றை கடலாடி போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News