இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல். 4 பேர் கைது.
இலங்கைக்கு கடத்த இருந்த 350 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல். 4 பேர் கைது. ஆட்டோ, பைக் பறிமுதல். கடலோர காவல்துறை நடவடிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீரசங்கிலிமடம் கடற்கரையில் இருந்து தொண்டி பகுதியில் கடத்தல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இராமேஸ்வரம் சாலை வீரசங்கிலி மடம் கடற்கரை பகுதிக்குச் சென்று ரோந்து சென்றபோது ஏழு சாக்கு மூட்டைகளில் 350 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட தொண்டி பகுதியைச் சேர்ந்த கலந்தர் அலி, கலந்தர் ஆசிக், கலந்தர் மைதீன் மற்றும் ரஹ்மான் ஆகிய நான்கு நபர்களையும், கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு ஆட்டோ மற்றும் பல்சர் பைக்கை பறிமுதல் செய்து தேவிபட்டினம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் எத்தனை நாட்களாக கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது, எந்த நாட்டிற்கு இவர்கள் கடத்த இருந்தார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.