பிழைப்பு ஊதியம் வழங்கக்கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் தர்ணா

கமுதி கூட்டுறவு வங்கி முன்பு பிழைப்பு ஊதியம் வழங்ககோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.;

Update: 2021-09-28 06:41 GMT

தர்ணாவில் ஈடுபட்டுள்ள பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கியின் செயலாளர் மீனாட்சி சுந்தரம்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள காவடிபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2016-2017 ஆம் ஆண்டு நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி நடைபெற்றதாக கூட்டுறவு வங்கியின் செயலாளர் மீனாட்சி சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி செயலாளர் மீனாட்சி சுந்தரம் பணியில் இல்லாததால் பிழைப்பு ஊதியம் கேட்டு, 4 மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதிமன்றம் பிழைப்பு ஊதியம் கொடுக்க உத்தரவிட்டும் அதிகாரிகள் மற்றும் வங்கியின் தலைவர் கொடுக்காததால் 4 மாதங்களாக மீனாட்சி சுந்தரம் பிழைப்பு ஊதியம் வாங்க முடியவில்லை.
இதனால் இன்று பிழைப்பூதியம் வழங்க வேண்டி கமுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கமுதி காவல் துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, காவல்துறையினர் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த மீனாட்சி சுந்தரத்தை கமுதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிழைப்பூதியம் வழங்காததால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டும் பிழைப்பூதியம் வழங்காமல் காவடிப்பட்டி கூட்டுறவு வங்கி தலைவரின் கணவர் தலையீட்டின் காரணமாக பிழைப்பூதியம் வழங்காமல் காலதாமதம் செய்வதாக வேதனையுடன் தெரிவித்தார்.
இனிமேல் பிழைப்பூதியம் வழங்காமல் காலம் தாழ்த்தினால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மீனாட்சி சுந்தரம் கூறினார்.
Tags:    

Similar News