முதுகுளத்தூர்: டூவீலர் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (17)தன் தாய் தமிழ்செல்வியிடம் (டூவிலர்) இருசக்கர வாகனம், கேட்டும், அவர் வாங்கி தராத காரணத்தால் மோட்டார் பம்ப் செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த ஈஸ்வரமூர்த்தி, கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். இறந்த ஈஸ்வரமூர்த்தியின் உடல், பரிசோதனை ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வர மூர்த்தியின் தாய் தமிழ்செல்வி, கீழத்தூவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இதுகுறித்து கீழத்தூவல் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.