கமுதி அருகே புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.;
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. பகல் மற்றும் இரவு ஆட்டம் ஆக மின் ஒளியில் மாவட்டத்தில் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு போட்டிகள் நடைபெற்றன.
முடிவு போட்டியில் புதுக்கோட்டை மற்றும் ராமசாமிபட்டி கிராம அணிகள் மோதின. இதில் 25க்கு 5 என்ற புள்ளியில் புதுக்கோட்டை அணி வென்றது. வெற்றி பெற்ற முதல் 4 அணிகளுக்கு ஆள் உயர கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை ஏராளமானார் கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.