1.7 டன் மஞ்சள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சியா? பாேலீசார் விசாரணை

மினி லாரியில் கொண்டு வரப்பட்ட 1700 கிலோ மஞ்சள் பறிமுதல். இலங்கைக்கு கடத்த முயற்சியா? போலீசார் தொடர்ந்து விசாரணை.;

Update: 2021-09-04 13:46 GMT

இராமநாதபுரம் அருகே சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையில் பிடிப்பட்ட மினிலாரி.

இராமநாதபுரம் அருகே சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக சமையல் மஞ்சள் மூடைகளை ஏற்றிச் சென்ற ஒரு மினி லாரியை சோதனை செய்த போது அதில் 1700 மஞ்சள் இருந்தது தெரியவந்தது அந்த லாரியை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே சென்ற மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த லாரியில் 58 மூடைகளில் தலா 25 கிலோ வீதம் 1,700 கிலோ சமையல் மஞ்சள் இருந்ததை பார்த்தனர்.

வியாபாரி அல்லாத ஒருவருக்கு இந்த மஞ்சள் கொண்டு செல்லப்படுவதை அறிந்து உடனடியாக லாரியுடன் மஞ்சளை பறிமுதல் செய்தனர். இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூபாய் 7000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட மஞ்சளாக இருக்கலாம் என்பதால் லாரியில் இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News