முதுகுளத்தூரில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

முதுகுளத்தூரில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த நிறைமாத பசுமாடு மீட்பு.

Update: 2021-09-21 12:37 GMT

முதுகுளத்தூரில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வண்ணார் தெருவில் உள்ள காளிமுத்து என்பவரது நிறை மாத பசுமாடு ஒன்று அவரது வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதை அறிந்த மாட்டின் உரிமையாளர் காளிமுத்து முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு மீட்புப் குழுவிற்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து கழிவுநீர் தொட்டியில் மூழ்கிய நிலையிலிருந்த பசு மாட்டினை பத்திரமாக மீட்டனர். நிறைமாத கர்ப்பிணியான பசுமாடு கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னர் பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது அறிந்த பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பசு மாட்டினை பத்திரமாக மீட்டு தந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர்களுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் காளிமுத்து கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

Tags:    

Similar News