முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற அரிசி: பெற்றாேர்கள் அதிர்ச்சி

முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற அரிசி, பருப்பு வழங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி.

Update: 2021-10-01 15:31 GMT

முதுகுளத்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற அரிசி, பருப்பு வழங்கியதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, முட்டை போன்ற சத்தான உணவு பொருட்கள் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொசுக்குடிப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அரிசி, பருப்பில் புழுக்கள் இருந்ததாகவும், தரமற்ற முறையிலும் துர்நாற்றம் வீசக்கூடிய அளவில் உள்ளதாக பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் இன்று அப்பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பருப்பு குறித்து பெற்றோரிடம் கேட்டறிந்தார். வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Tags:    

Similar News