உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

முதுகுளத்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 66 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-02-02 16:12 GMT
உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

  • whatsapp icon

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதும் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவரின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்யபோது, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.66 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் விசாரணையில் செல்லப்பாண்டியன் என்பவர் ஆடுகளை விற்று அந்த பணத்தை கொண்டு சென்றதாக தெரியவந்தது.

Tags:    

Similar News