இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கை மனுக்கள் பெற்று, அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 184 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்தநிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சிகணேசன், சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.