முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்(பொ) நேரில் ஆய்வு

Update: 2021-10-13 17:56 GMT

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழாவையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்(பொ) நேரில் ஆய்வு செய்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்(பொ) நேரில் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அக்.30 ல் 59வது குருபூஜை விழா, 114 வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அக்டோபர் 28 ,29, 30 ஆகிய மூன்று நாட்களில் பசும்பொன் கிராமத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு வாகனம் நிறுத்தவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இன்று பசும்பொன் கிராமத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்(பொ) காமாட்சி கணேசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்பு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் முன்பு உள்ள தியான மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், கொரோனாபரவல் காரணமாக அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன் உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News