ஆட்டோவில் தவறவிட்ட நகைகள்: மூதாட்டியிடம் ஒப்படைத்த ஓட்டுனர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டோவில் விட்டு சென்ற தோடு. மூதாட்டியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பொதுமக்கள் பாராட்டு.;
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டோவில் விட்டு சென்ற தோடு. மூதாட்டியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பொதுமக்கள் பாராட்டு.
இராமநாதபுரம் மாவட்டம் ஆதியூர் காரங்காடு பகுதியைச் சேர்ந்த முத்து மனைவி மீனா என்ற 80 வயது மூதாட்டி. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பழனி என்பவருடைய ஆட்டோவில் சிகிச்சைக்காக தேவகோட்டை சென்றுள்ளார். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்க சென்றவர், ஆட்டோவில் தனது பையை வைத்து விட்டு சிகிச்சை முடித்து மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது அவரது தோடு இரண்டும் காணாமல் போனது தெரிந்து தேடியுள்ளார்.
மேலும் ஆட்டோ ஓட்டுனர் எடுத்துக் கொண்டதாகவும் சந்தேகித்த மூதாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் ஆட்டோ ஓட்டுனர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் சுத்தம் செய்தபோது, இரண்டு தோடுகளும் ஆட்டோவின் உள்ளேயே சீட்டின் ஓரத்தில் கிடந்துள்ளது. அதை எடுத்து வைத்திருந்த ஒட்டுநர் விசாரித்ததில் தோட்டை தொலைத்தது மூதாட்டி தான் என்பதை உறுதி செய்தார்.
அவரை இன்று வரவழைத்து அடையாளங்கள் கேட்கப்பட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தார். மூதாட்டி ஒரு நிமிடம் கீழே அமர்ந்து நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அதை கண்ட மக்கள் சற்று கலங்கினர். ஆட்டோ ஓட்டுநரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு தொலைந்து தனது தங்கதோடு கிடைத்த மகிழ்ச்சியில் மூதாட்டியும் கண்ணீர் மல்க சென்றார்.