கீழக்கரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.;
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். கீழக்கரை நகராட்சி தலைவர் எஸ்.செஹனாஸ் ஆபிதா, கீழக்கரை நகராட்சி. துணைத்தலைவர் வி.எம்.எஸ்.ஹமீது சுல்தான், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கேஆர்டிகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) பி.குணசேகரன், கீழக்கரை நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் எம்எம்கே முகமது காசிம் மரைக்கார் எஸ்.முகமது பாதுஷா, எம்எஸ் சர்ஃப்ராஸ் நவாஸ், அரசு வழக்கறிஞர் ஏ.மனோகரன், இராமநாதபுரம் அண்ணாமலை டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் டி.கே.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.