மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இந்தியகடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு
மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு செய்தார்.;
மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே இலங்கை இருப்பதால் தெற்கு கடற்கரையான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகள், சமையல் மஞ்சள், கடல் பல்லி, கடல் குதிரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி சந்தேகநபர்கள் கடற்கரை வழியாக அவ்வப்போது தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றனர். இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக பாம்பன் குந்து கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இராமேஸ்வரம் வந்த இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஏ.பி சிங், இராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல்களை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் தீவுகளில் தாழ்வாக பறந்து, கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், உச்சபுளியில் உள்ள கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பருந்து விமான தளத்திற்கு சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.