முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.

Update: 2021-10-22 02:32 GMT

முதுகுளத்தூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் உருக்குலைந்த இருசக்கர வாகனம்.

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அ.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் 17 வயது மகன் ராமர் என்பவர் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அ.நெடுங்குளம் கிராமத்திற்கு வரவேண்டிய 37 வழித்தடம் கொண்ட அரசுப்பேருந்து வரவில்லை. இதனால் அப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் புழுதிக்குளம் கண்மாய் கலுங்கு அருகே சென்றபோது அசுர வேகத்தில் வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் மாணவன் ராமர் நிகழுவிடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்து விபத்து குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு சென்ற மாணவன் மீது அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த மாணவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News