மங்களூரில் மீட்கப்பட்ட மீனவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11 ம் தேதி) கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில், தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த படகில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை சுமார் 11.30 மணி அளவில் கர்நாடக மாநிலம் மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில்,படகு மூழ்கி விபத்தானது.
இந்த விபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற மீனவரும், மேற்கு வங்காளத்தைச் சார்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரையும், விபத்து ஏற்படுத்திய கப்பல் ஊழியர்கள் உயிரோடு மீட்டனர். இந்நிலையில், இன்று தமிழக அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்.