பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து. கெமிக்கல் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.;
பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து. கெமிக்கல் மற்றும் பிளீச்சிங் பவுடர் கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூர்யில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கமுதி தாலுகாவில் கிராம பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இங்கு இருந்து மருந்துகள் விநியோகம் செய்யபடும். இந்நிலையில் நேற்று பிளீச்சிங் பவுடர்கள் வந்து இருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் கெமிக்கல் மற்றும் பிளீச்சிங் பவுடர் மூடைகள் இருக்கும் அறையில் இருந்து புகை வருவதை அப்பகுதியில் சென்ற 108 வாகனத்தில் சென்றவர்கள், முதுகுளத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து முதுகுளத்தூர் மற்றும் கமுதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எரிந்த இடத்திற்கும் மருத்துவமனைக்கும் தூரம் என்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.