இமானுவேல் சேகரன் பிறந்த தினம்: இராமநாதபுரத்தில் இளைஞர்கள் இரத்த தானம்
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆர்வமுடன் இரத்தக் கொடை வழங்கிய இளைஞர்கள்.;
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆர்வமுடன் இரத்தக் கொடை வழங்கிய இளைஞர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் தெற்கு தரவை ஊராட்சி அம்மன் கோவில் கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு செந்தாடி பகலவன் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாம் கவுரவ தலைவர் சரவண பாண்டியன் தலைமையில், தலைவர் பாண்டியன், செயலாளர் அசன் பாண்டியன், பொருளாளர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
இராமநாதபுரம் ரத்த வங்கியின் சார்பில் டாக்டர் அருண் ராஜ் மற்றும் செவிலியர்கள் இரத்தக் கொடை சேகரித்தனர். ஏஆர்டி தொடர் பணியாளர் திட்டம் சார்பில் என்ஜிஓ விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்த கொடை வழங்கிய பயனாளிகளுக்கு செந்தாடி பகலவன் அறக்கட்டளை சார்பில் சான்றிதழ்களை வழங்கினார்கள்.