திருபுல்லாணி பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கரகாட்டம், ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.;

Update: 2021-12-29 06:55 GMT

திருபுல்லாணி பகுதி கிராமங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

கரகாட்டம் ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் ஆர்வமுடன் கண்டு களித்து மகிழ்ந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகவேல் மற்றும் முரளி தலைமையில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி மற்றும் கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு கொரொனா காரணமாக உரிய வயதில் உரிய கற்பித்தல் என்ற முழக்கத்துடன் மாணவர்களின் இல்லம் தேடிச்சென்று ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.

இதனையொட்டி திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, வெங்குளம், லாந்தை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு தப்பாட்டம் ஒயிலாட்டம் நாடகம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் இறுதி நாளான இன்று கருங்குளம் கிராமத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலைஞர்களோடு ஆசிரியர்களும் ஆடிப்பாடி பிள்ளைகளுக்கு பாடங்களை கலை வடிவில் நடத்தியதை மாணவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோரும் உர்ச்சாகத்துடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக நலிவடைந்த கிராமிய கலைஞர்களுக்கு இல்லம் தேடி கல்வி மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கிராமியக்கலைஞர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News