முதுகுளத்தூர்:இயந்திரம் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே பூசேரி கிராமத்தில் உப்புநீரை நன்னீராக மாற்றும் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-06 08:56 GMT

முதுகுளத்தூர் அருகே பூசேரி கிராமத்தில் அடிக்கடி பழுதாகும் உப்புநீரை நன்னீராக மாற்றும் குடிநீர் இயந்திரம்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த பூசேரி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் முதன்மை தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பும் தான். இந்த கிராமத்தில் குடிநீர் தேவையை கடந்த 30 ஆண்டுகளாக அங்கு அமைக்கப்பட்டிருந்த (ஆர்ஓபிளாண்ட்) உப்புநீரை நன்னீராக்கும் மாற்றும் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவை அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிநீருக்காக பல மைல் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் உப்பு நீரை நன்னீராக மாற்றும் இயந்திரத்தின் பழுதை சரி செய்து முறையாக தொடர்ந்து குடிநீர் வழங்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆர்ஓ வாட்டர் பிளாண்ட்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் தொகுதியான முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Tags:    

Similar News