இராமநாதபுரத்தில் இறந்து கிடந்த எலியை குழி தோண்டி புதைத்த நாய்
இராமநாதபுரத்தில் இறந்து கிடந்த எலியை குழி தோண்டி நாய் புதைத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரல் .;
சாலையோரம் மற்றும் தெருவோரம் விலங்குகள் அடிபட்டு கிடக்கும் காட்சியை கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடுகிறோம். ஏன் மனிதர்களும் அடிபட்டு கிடந்தால் கூட ஒரு சில நல்லெண்ணம் படைத்த மனிதர்கள் மட்டும் அருகில் சென்று உதவி செய்வதும், ஐயோ நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்கி செல்வதும் உண்டு. ஆனால் நன்றியுள்ள விலங்கு நாய் என்று பழமொழிக்கு ஏற்ப, இராமநாதபுரம் பாரதி நகரில் இரண்டு நாட்களாக இறந்துகிடந்த துர்நாற்றம் வீசிய எலியை பார்த்த நாய், அதை கவ்வி குழிதோண்டி புதைத்து, மணலை மூடும் காட்சி காண்போரை திகைக்க வைத்துள்ளது. இந்த மாதிரி நன்றியுள்ள விலங்கான அறிவு உள்ள ஜீவன்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.