கீழக்கரையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

இராமநாதபுரம் அருகே கீழக்கரையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

Update: 2022-04-02 06:15 GMT

இராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கம், கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது. முஹமது சதக் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.யூசுப் தலைமை வகித்தார். முஹமது சதக் அறக்கட்டளை செயலாளர் எஸ்.எம்.சர்மிளா, முஹமது சதக் அறக்கட்டளை பி.ஆர்.ஐ.செயல் இயக்குநர். ஹமீது இப்ராஹீம், அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஜெ.ஏ. ஹபீப் முஹமது சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முஹமது சதக் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர். வி.சுரேஷ்குமார் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராமநாதபுரம் காவல் கூடுதல்கண்காணிப்பாளர் சி.ஜெயசிங், கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் பி.டி.சுபாஷ், இராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ஆ.ரவிசந்திர ராமவன்னி ஆகியோர் கோப்பை, சானறிதழ் வழங்கினர்.  மாவட்ட வாலிபால் சங்க பொருளாளர் ஏ.முகமது யூசுப் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

கல்லூரி அளவில் ஆடவர் பிரிவில் சி வி சி கீழக்கரை, கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி அணிகள், பெண்கள் பிரிவில் வேலு மனோகரன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி கீழக்கரை முஹமது சதக்பொறியியல் கல்லூரி அணிகள் முதலிரண்டு பிடித்து கோப்பை வென்றன. பள்ளிகள் அளவில் ஆடவர் பிரிவில் சித்தார்கோட்டை முஹமதியா மேல்நிலைப்பள்ளி, தொண்டி ஐஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் பிரிவில் இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிரண்டு பிடித்து கோப்பை வென்றனர்.

Tags:    

Similar News