தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பாடு: பசும்பொன்னில் அமைச்சர் ஆய்வு

கமுதி அருகே பசும்பொன்னில், தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பாடு குறித்து, அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-10-20 12:15 GMT

கமுதி அருகே பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில்,  முத்துராமலிங்க தேவரின் 114 -வது ஜெயந்தி விழாவும், 59 குருபூஜை விழாவும் வருகின்ற அக். 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து, இன்று பசும்பொன் கிராமத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு, இராமநாதபுரம் மாவட்டம், பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்த அனுமதி இல்லை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News