பீர் பாட்டிலுக்குள் கரப்பான்பூச்சி : இராமநாதபுரத்தில் பதறிய குடிமகன்கள்
இராமநாதபுரம் மது பிரியர்களை கலங்கடித்த கரப்பான் பூச்சி.;
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சிறுபோது கிராமத்தில் உள்ள மதுபான கடையில்(கடை எண் 6929) கொண்ட மதுபான கடையில் கடந்த BLOCK BEAREEL என்ற மதுபாட்டிலை இளைஞர்கள் வாங்கியபோது பாட்டிலின் உள்ளே கரப்பான்பூச்சி ஒன்று கூடு கட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதை கண்டு திடுக்கிட்ட மது பிரியர் பாட்டில் குறித்து விற்பனையாளரிடம் கேட்ட போது அப்பட்டிலை பறிக்க முயன்றுள்ளார். உடனே சுதாரித்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர் கபில் தாஸ் மதுபாட்டிலலோடு உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார்.
மேலும் சமூக ஆர்வலர் டாக்டர் கபில் தாஸ் கூறியதாவது:- கடந்த வாரம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சிறுச்போது கிராமத்தில் உள்ள மதுக்கடையில் நானும் என்னுடன் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து மதுபாட்டில்களை வாங்கினோம். வாங்கிய பாட்டிலை குடிப்பதற்கு திறக்க முற்பட்ட போது உள்ளே கரபப்பான் பூச்சி இறந்த நிலையில் உள்ளது. கடைக்காரரிடம் கேட்ட போது பாட்டிலை பறிக்க முயன்றார். நான் அந்த பாட்டிலை அவரிடம் ஒப்படைக்காமல் இராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பாட்டிலோடு புகார் அளித்தேன். மது உற்பத்தியாளர்களின் கவனக்குறைவால் இது போன்ற அசம்பாவிதம் நடக்கிறது. மதுபிரியர்கள் என்பதால் தானே பாட்டில்களில் பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி போன்ற உயிரினங்களை அடைத்து விற்பனை செய்கிறது. இதில் அரசாங்கம் தலையிட்டு இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.