தோட்டக்கலை பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

இராமநாதபுரம் மாவட்டம் தோட்டக்கலைப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.;

Update: 2021-11-29 13:17 GMT

மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்.

இராமநாதபுரம் மாவட்டம் தோட்டக்கலைப் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்யுமாறு தோட்டக்கலை விவசாயிகளுக்கு வேண்டுகோள். மாவட்டஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தகவல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ராபிபருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப் பயிர்களான மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் வாழைபயிர்களைப் பயிரிடும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துபயன்பெறலாம். இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலைபயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்பாராத இயற்கை பேரிடரிலிருந்து பயிர்களைக் காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதமமந்திரியின் பயிர் காப்பீட்டுதிட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலமாக பதிவுசெய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் மூலமாக பதிவுசெய்யும் போது விண்ணப்பபடிவம் உறுதிமொழி படிவம், கிராமநிர்வாக அலுவலர் வழங்கும் மூவிதழ் அடங்கல், வங்கிகணக்குப் புத்தகத்தின் முதல் பக்கநகல் மற்றும் ஆதார் அட்டைநகல் ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்டுள்ள விவரப்படி பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

1.மிளகாய், பீரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1330.7-,காப்பீடு பதிவு செய்ய கடைசி தேதி (31.12.2021),காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.26614

2.வாழை, பீரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1929.2-,காப்பீடு பதிவு செய்ய கடைசி தேதி (28.02.2022),காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.38584

3.கொத்தமல்லி, பீரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.534.7-,காப்பீடு பதிவு செய்ய கடைசி தேதி (18.01.2022),காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.10695

4.வெங்காயம், பீரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.579.7-காப்பீடு பதிவு செய்ய கடைசி தேதி (31.01.2022), காப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.11595

மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலைதுணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் வளாகம், இராமநாதபுரம் அலுவலகத்தையோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News