கமுதி அருகே இருதரப்பு மோதல்: ஒரு பெண் உட்பட 6 பேருக்கு வெட்டு

கமுதிஅருகே இருதரப்பு மோதல். ஒரு பெண் உட்பட 6 பேருக்கு வெட்டு. பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.;

Update: 2021-10-15 11:43 GMT

கமுதி அருகே இருதரப்பு மோதலில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இலந்தைக்குளம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோவில் திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனை பக்கத்து கிராமமான சேரந்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த குருவையா என்பவரின் மகன் ராஜேஷ் அரவது நண்பர்களுடன் கலை நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் இந்த தகராறு குறித்து சேரந்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் இலந்தைகுளம் கிராமத்திற்கு இன்று சென்று பிரச்சினை குறித்து கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இலந்தைக்குளத்தைச் சேர்ந்த நபர்கள், சேரந்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, ராமையா, வேல்முருகன், முத்துக்குமார், ராஜேஸ்வரி, ஆனந்த பிரபு ஆகிய 6 பேரையும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த அனைவரும் பேரையூர், முதுகுளத்தூர், இராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News