கமுதி அருகே லாரியை முந்தி செல்ல முயன்ற ஆட்டோ விபத்து

கமுதி அருகே லாரியை முந்தி செல்ல முயன்ற ஆட்டோ விபத்து. தாய் கண் முன்னே 12 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி.;

Update: 2021-07-05 16:09 GMT

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் நுழைவாயில் அருகே விருதுநகர் மாவட்டம் வீரசோழனிலிருந்து கமுதி தர்காவிற்கு வழிபாடு செய்ய ஆட்டோவில் குடும்பத்தினருடன் வந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை ஆட்டோ முந்திக் கொண்டு செல்ல முயற்சித்த போது லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்த விருதுநகர் மாவட்டம் வீரசோழனை சேர்ந்த அப்துல்ஹமீது என்பவரின் 12 வயது மகன் பஷீர் அகம்மது என்ற சிறுவன் தனது தாயின் கண் முன்னே தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டார்.

மேலும் பதட்டம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் தப்பியோடிவிட்டார். இந்த விபத்து குறித்து லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தும், தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுனரை கமுதி போலீசார் தேடி வருகின்றனர். இறந்த சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

Similar News