ஏர்வாடி அருகே சாலை விபத்தில் தாய்-மகன் பலி

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சாலை விபத்தில் தாய்-மகன் பலியாகினர்.;

Update: 2022-04-11 23:45 GMT

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கோகுல் நகரைச் சேர்ந்த சரவணகுமார் மற்றும் அவரது தாயார் கலையரசி. இவர்கள் இருவரும் அருகேயுள்ள சிக்கல் சென்று விட்டு திரும்பி.  ஏர்வாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத எதிரே வந்த கனரக வாகனம,  இதம்பாடல் அருகே மோதியதில் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பலியாகிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏர்வாடி காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் வந்த பைக்கின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News