கமுதி: 70வது பிறந்தநாளுக்கு 70 வகையான உணவு விருந்தளித்து அசத்திய குடும்பத்தினர்!
கமுதியில், முதியவரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு,70 வகையான உணவுகளை தயார் செய்து, விருந்து படைத்து குடும்பத்தினர் அசத்தியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக்கடை வைத்திருப்பவர் கணேசன். இவருக்கு இன்று 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் வித்தியாசமான முறையில் விருந்து படைத்து அசத்தியுள்ளனர்.
அதன்படி, அனைவரும் இணைந்து, எழுபதாவது பிறந்த நாளை குறிக்கும் வகையில், எழுபது வகையான சைவ உணவுகளை அவருக்கு தயார் செய்து, ஊட்டி மகிழ்ந்தனர். குடும்பத்தினரின் மாறாத பாசம் கண்டு, கணேசன் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
கூட்டுக்குடும்பம் என்பது தற்போதைய காலத்தில் அரிதாகிவிட்ட நிலையில், 70 வயது கடந்த பெரியவருக்கு குடும்பத்தினரின் விருந்து உபசரிப்பு, அனைவரையும் குதூகலிக்கச் செய்துள்ளது.