கம்யூனிஸ்ட் கட்சியினர் காஸ் சிலிண்டர் முன் ஒப்பாரி போராட்டம்.
கமுதியில் பெட்ரோல்,டீசல்,சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து,கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டர் முன் ஒப்பாரி போராட்டம்.;
கமுதியில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டர் முன் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ராம் முத்துவிஜயன் தலைமையில் பெட்ரோல் டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கமுதி தபால் நிலையம் வாசலில் தொடங்கி பேருந்து நிலையம் வரை காஸ் சிலிண்டரை தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் தபால் நிலையம் வந்து சிலிண்டர் முன் அமர்ந்து பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.