கொரோனா- கடலாடியில் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு-எஸ்.பி மலர்தூவி மரியாதை.
மனசாட்சி இல்லாத கொரோனா...;
கடலாடியில் கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐக்கு எஸ்.பி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலையத்தில் பணியாற்றிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ மணிகண்டன் என்பவர் கடந்த 15ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று அவரது திருவுருவ படத்தை கடலாடி காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சிறப்பு எஸ்.ஐ மணிகண்டன் சுகாதார துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் இணைந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.