முன்னாள் அமைச்சர் வேட்பு மனு தாக்கல்

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.;

Update: 2021-03-17 17:27 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, இந்த நிலையில் திமுக சார்பில் முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் உறுதி மொழி பிரமானத்தை வாசித்து கையொப்பமிட்டார். உடன் திமுக மாவட்டச் செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற வேட்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் ராஜகண்ணப்பன் திமுக தமிழகத்தில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்று மகத்தான ஆட்சி அமைக்கும் என்றும், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News