அதிமுக தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் - எம்எல்ஏ

Update: 2021-03-14 05:15 GMT

வரும் தேர்தலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எம்எல்ஏ சதன்பிரபாகரன் தெரிவித்தார்.

பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகரன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், கொரோனா காலங்களில் பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் காய்கறி தொகுப்புகள் வழங்கியதாகவும், இட ஒதுக்கீட்டு பிரச்சனையை திமுக திசைதிருப்பி போராட்டங்களை தூண்டிவிடுகிறது. மீண்டும் ஜாதி வாரியாக மக்கள் தொகை அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி முறையாக இட ஒதுக்கீடு வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பரமக்குடி சட்டமன்ற தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

Tags:    

Similar News