முதுகுளத்தூரில் ஆடு திருடியவர் கைது

முதுகுளத்தூரில் ஆடு திருடிய ஒருவர் கைது. தப்பி ஓடிய ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.;

Update: 2021-02-15 18:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த எம்.வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் அவருக்கு சொந்தமான ஆட்டினை அவரது வீட்டின் முன்பு அடைத்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது இரவு நேரம் அவரது ஆடுகளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர், அப்பொழுது ஆடு கத்தும் சத்தம் கேட்டு விழித்தபோது T.வாச்சியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் விசுவநாதன் (30), ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்த முத்துகாமாட்சி மகன் ரமேஷ் என்பவர் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனடிப்படையில் ஊர்க்காரர்களை பார்த்ததும் ரமேஷ் என்பவன் தப்பி ஓடிவிட்டான். விசுவநாதன் என்பவனை கிராம மக்கள் பிடித்து ஆடுகளுடன் முதுகுளத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனடிப்படையில் முதுகுளத்தூர் போலீசார் ஆடு திருடிய விசுவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் தப்பியோடிய ரமேஷ் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News