தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

Update: 2021-02-11 05:30 GMT

தைஅமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.இதில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல நீர்நிலைகளிலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News