தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசுப்பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மரபியல் சோதனை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 44 நபர்களுக்கு மாதிரி அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதில் மொத்தம் நான்கு பேருக்கு பாசிட்டிவ் எனவும் 8 பேருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. பறவைக் காய்ச்சல் தொடர்பாக உயர்மட்டக் குழுவின் ஆலோசனை நடத்தி தமிழகம், கேரளா ஆந்திரா மாநில எல்லை பகுதிகளில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் என தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.